மயிலாடுதுரை மாவட்டம் மணல்மேடு பகுதியில் சேதமடைந்து காணப்படும் குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!


மயிலாடுதுரை :

மணல்மேடு:

மணல்மேடு பகுதியில் சேதமடைந்து காணப்படும் குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் தொட்டி:

மணல்மேடு அருகே நடுதிட்டு மெயின் ரோட்டில் குடிநீர் தொட்டி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியை அந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி காட்சி பொருளாக காணப்படுகிறது. குடிநீர் தொட்டியை சுற்றிலும் குப்பைகளும் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீருக்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். 

சீரமைக்க வேண்டும்:

மேலும் கோடைகாலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் பெரும் தேவையாக அமையும். எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும் குடிநீர் தொட்டியை சுற்றி கிடக்கும் குப்பைகள் மற்றும் செடிகொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MrChe #மிஸ்டர்சே

*மயிலாடுதுரை மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள *

Whatsapp Link – https://chat.whatsapp.com/HxdF86EEjRM9Rk5o6tvU2B

Facebook Link – https://www.facebook.com/groups/MayiladuthuraiNews/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *