கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பசந்திரம் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் !!


கிருஷ்ணகிரி :

தேன்கனிக்கோட்டை:

திப்பசந்திரம் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்:

கிருஷ்ணகிாி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்பசந்திரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க கோரி பல முறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு கொடுத்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில்ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை:

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

#MrChe #மிஸ்டர்சே

கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Whatsapp Link – https://chat.whatsapp.com/Cvm5EOvWlSp31tIUaIl4da

Facebook Link – https://www.facebook.com/KrishnagiriNewsChannel/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *