நீலகிரி-கேரள எல்லையில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு !!

கூடலூர்:


சட்டமன்ற தேர்தலையொட்டி நீலகிரி-கேரள எல்லையில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம்:


சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கூடலூர் சட்டமன்ற தொகுதி கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் உள்ளது. கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது.  இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நீலகிரி-கேரள எல்லையோர கூடலூர் பகுதி சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள நாடுகாணி, சேரம்பாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல், கக்கநல்லா உள்பட அனைத்து சோதனைச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

84 துணை ராணுவத்தினர்:


இதுகுறித்து போலீசார் கூறியது:-

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு 84 பேர் வந்து உள்ளனர்.  ஒரு சோதனைச்சாவடிக்கு 2 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் வாக்குச்சாவடி மையங்களிலும் துணை ராணுவத்தினர் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

#MrChe #மிஸ்டர்சே

நீலகிரி மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link – https://chat.whatsapp.com/C2qf3lmE2Fb10bmWjMPTO2

Facebook Link https://www.facebook.com/groups/NilgirisNews/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *