தேன்கனிக்கோட்டை கவிநரசிம்மர் கோவில் தேரோட்டம்!!!

தேன்கனிக்கோட்டை கவிநரசிம்மர் கோவில் தேரோட்டம் நடந்தது. 

தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி, காயத்ரி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ஏற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை கோவிலை சுற்றி இழுத்து வந்தனர். அப்போது தேரின் மீது பக்தர்கள் வாழைப்பழம், உப்பு, கடுகு, மிளகு போன்ற பொருட்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *