சின்னங்கள் ஒதுக்குவதில் இரவு வரை நீடித்த குழப்பம் !!

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 26 பேர் போட்டியிடுகிறார்கள். சுயேச்சைகளாக 18 பேர் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்குவதில்  இரவு வரை குழப்பம் நீடித்தது.திருப்பத்தூர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்ளிட்ட 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனையின் போது 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நேற்று ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் வாங்கினார். இதையடுத்து 26 பேர் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 26 பேர் போட்டியிடுவதால் திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் நிலை உள்ளது.

சின்னம் ஒதுக்குவதில் குளறுபடி,


இறுதி வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து தலைமையில் அதிகாரிகள் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் மற்ற 3 சட்டமன்ற தொகுதியில் குறைந்த சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டதால் அங்கு அவர்களுக்கு சின்னம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் மற்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.


திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை சுயேச்சை வேட்பாளர்களாக 18 பேர் போட்டியிட்டதால் அவர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் குளறுபடி ஏற்பட்டது. இரவு 10 மணி கடந்த பிறகும் இறுதி வேட்பாளர்களுக்கு உரிய சின்னங்கள் அடங்கிய பட்டியல் வெளியிட தாமதம் ஏற்பட்டது. இதனால் தாலுகா அலுவலகத்தின் முன்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வேட்பாளர்களும் காத்து கிடந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், கட்சி, சின்னங்கள் விவரம் :

1. மருது அழகுராஜ்(அ.தி.மு.க.)- இரட்டை இலை
2. கே.ஆர்.பெரியகருப்பன்(தி.மு.க.)-உதயசூரியன்
3. அமலன் சபரிமுத்து(இந்திய ஜனநாயக கட்சி)- ஆட்டோ ரிக் ஷா
4. கே.கே.உமாதேவன்(அ.ம.மு.க.)-குக்கர்
5. கோட்டை குமார்(நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி
6. சரஸ்வதி(புதிய தமிழகம் கட்சி)- தொலைக்காட்சி பெட்டி
7. சே.முருகன்(அனைத்து மக்கள் புரட்சி கட்சி)- கண்ணாடி டம்ளர்
8. வீரபாண்டியன்( மை இந்தியா பார்ட்டி)- கண்காணிப்பு கேமரா
9. அப்துல்கிஷோர்பாபு(சுயே)- விரலி
10. ஆனந்தன்(சுயே)- கணினி
11. கண்ணன்(சுயே)- ரொட்டி சுடும் கருவி
12.. கார்த்திகா(சுயே)- நடை வண்டி
13.செல்வராஜ்(சுயே)- ஊதல்
14 பரமசிவம்(சுயே)- பானை
15. பழனியப்பன்(சுயே)- வயலின்
16. பார்த்தசாரதி(சுயே)- இஸ்திரிபெட்டி
17. பெரியசாமி(சுயே)- தர்பூசணி
18 மல்லிகா(சுயே)- கைப்பெட்டி
19. முகமது ரபீக்(சுயே)- விளக்கேற்றி
20. முத்துலட்சுமி(சுயே)- திருகி
21,. ராமு முருகேசன்(சுயே)- கிரிக்கெட் வீரர்
22. ராஜேஷ்(சுயே)- வைரம்
23.. ராஜேஸ்வரி(சுயே)- தென்னந்தோப்பு
24. ரேணுகா(சுயே)- டிஷ் ஆண்டனா
25. வீராயி(சுயே)- அலமாரி
26.. ஜெயச்சந்திரன்(சுயே)- மேஜை

#MrChe #மிஸ்டர்சே

திருப்பத்தூர் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Whatsapp Link – https://chat.whatsapp.com/B8cGP5zAnD6Kt1ydIi0XGg

*Facebook Link *- https://www.facebook.com/groups/ThirupathurNewsChannel/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *