பானை சின்னம் கேட்டு அடம் பிடித்த சுயேச்சை வேட்பாளர் !!

புவனகிரி, 
புவனகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 18 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 14 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.இதனை தொடர்ந்து நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யவும், வேட்பாளர்களுக்கு உரிய சின்னம் ஒதுக்குவதிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தயாரானார்கள்.

பானை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு அப்போது சுயேச்சை வேட்பாளரான கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்கிற செல்ல ஆனந்தமாலை என்பவர் தனக்கு பானை சின்னம் ஒதுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டார். இதனால் அதற்கான பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர் .இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், எங்களது கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சுயேச்சை வேட்பாளருக்கு அந்த சின்னத்தை ஒதுக்கினால் குழப்பம் ஏற்படும். ஆகவே சுயேச்சை வேட்பாளருக்கு  பானை சின்னம் ஒதுக்கக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
வாக்குவாதம்: 


அதற்கு சுயேச்சை வேட்பாளர் ஆனந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புவனகிரி தொகுதியில் யாரும் போட்டியிடவில்லை. ஆகவே தனக்கு பானை சின்னம் தான் ஒதுக்க வேண்டும் என்று கூறி தேர்தல் அலுவலர்களிடம் அடம்பிடித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் புவனகிரி சட்டமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அவருக்கு வேறு சின்னம் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு இரவு 10.30 மணி அளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

#MrChe #மிஸ்டர்சே

*கடலூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள *

Whatsapp link – https://chat.whatsapp.com/CE2y5Uwsg1wLyAnHKYxSta

Facebook link –https://www.facebook.com/groups/CuddaloreNews/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *