சர்வதேச குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை ஜரீன் வெண்கலப்பதக்கம் வென்றார் !!

புதுடெல்லி, 
சர்வதேச குத்துச்சண்டை போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் முந்தைய 2 சுற்றுகளில் உலக சாம்பியன்களுக்கு அதிர்ச்சி அளித்து இருந்த இந்திய வீராங்கனை நிஹாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் 2019-ம் ஆண்டு உலக சாம்பியஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான துருக்கி வீராங்கனை பூசெனாஸ் சாகிரோக்லுவிடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் காமன்வெல்த் போட்டி சாம்பியனான இந்திய வீரர் கவுரவ் சோலங்கி 0-5 என்ற கணக்கில் அர்ஜென்டினாவின் நிர்கோ குல்லோவிடம் வீழ்ந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *