பெருந்தொற்று பரவல் வேகம் எடுக்கிறது: 24 மணி நேரத்தில் 39 ஆயிரம் பேருக்கு கொரோனா!!

புதுடெல்லி,
இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, மீண்டும் வேகம் எடுக்கிறது. 10 ஆயிரத்துக்குள் இருந்து வந்த தினசரி பாதிப்பு இப்போது மெல்ல மெல்ல உயர்ந்து வேகம் பிடித்து வருகிறது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 39 ஆயிரத்து 726 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது.
கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலியும் தொடர்ந்து 100-ஐ கடந்து செல்கிறது.

நேற்று 172 பேர் இறந்த நிலையில் இந்த எண்ணிக்கை இன்று சற்றே குறைந்து 154 ஆக பதிவாகி இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 370 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து 20 ஆயிரத்து 654 பேர் பல்வேற ஆஸ்பத்திரிகளில்பெற்றசிகிச்சையின்விளைவாக வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை மீட்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 83 ஆயிரத்து 679 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 2 லட்சத்து 71 ஆயிரத்து 282 பேர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து மீள்வதற்காக தொடர் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3.93 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், கூட்டம் கூடுகிற இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும், விழாக்களில் பங்கேற்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews