தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசிபோட்டு கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்!!

வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஜவுளிக்கடை, ஓட்டல்கள், வணிக வளாகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

ஆலோசனை கூட்டம்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது, தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பிப்ரவரி மாதம் வரை குறைந்து கொண்டே வந்தது. தற்போது இந்த மாதத்தில் இருந்து மீண்டும் வேகம் எடுத்து பரவ தொடங்கி உள்ளது. பிப்ரவரி மாதம் 228 பேர் மட்டுமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில் 167 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவரும் பொதுஇடங்களில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இருசக்கர அல்லது 4 சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தொடர்ந்து இருமுறை முககவசம் அணிந்து வராமல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

காய்ச்சல் முகாம்:
சளி, காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும் நபர்கள் அந்த பகுதியில் நடைபெறும் காய்ச்சல் முகாம் அல்லது அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும். பஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், நடத்துனர்கள், ஓட்டல், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், துணிக்கடை மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்படும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் தங்கள் தொழிலாளர்களை அழைத்து சென்று கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். அல்லது அருகேயுள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என கலெக்டர் கூறினார்.  

#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *