10 ஆயிரம் ரன்களை கடந்து சர்வதேச போட்டியில் மிதாலிராஜ் சாதனை!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில், லக்னோ நகரில் வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 3வது ஒரு நாள் போட்டி நடந்து வருகிறது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதன்படி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது. இதில் அணியின் கேப்டனான மிதாலிராஜ் 36 (50 பந்துகள், 5 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.
அவர் 27.5வது ஓவரில் போஸ்க் வீசிய பந்தில் பவுண்டரி அடித்தபொழுது, சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இதனால் இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வார்ட்ஸ் படைத்த சாதனையை தொடர்ந்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீராங்கனை என்ற பெருமையையும் ராஜ் பெற்றுள்ளார். 10 ஆயிரத்து 1 ரன்களை எடுத்துள்ள ராஜ், சார்லட்டின் சாதனையையும் முறியடிக்க கூடும் என கூறப்படுகிறது.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Facebook Link – https://www.facebook.com/groups/Mr.CheNews