பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு!!

வெள்ளியணைகாணியாளம்பட்டி அருகே காணிகளத்தூரில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று, திருச்சி ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த அழைத்து செல்லப்படும் சாமி மாடு அழைத்து வரப்பட்டது. இதனை அடுத்து இக்கோவிலில் உள்ள முருகனுக்கு புனித நீர், இளநீர், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது, இதேபோல் சாமி மாட்டிற்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தி, மலர் மாலைகள் சூட்டி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனையும் சாமி மாட்டையும் வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

MrChe #மிஸ்டர்சே

                                                                                                               செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp link-https:https://chat.whatsapp.com/CihRlnTaMuLH4zDj2EiRdN

Facebook Link- https://www.facebook.com/groups/PudukaiNews/

Twitter Link – https://twitter.com/PudukaiNews?s=08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *