கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்!!

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. 

2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித் ஷா, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், ஒடிஷா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டக் கொண்டனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.  
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவருடன் அவரது மனைவி நூதன் கோயலும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
தடுப்பூசி போட்ட பிறகு அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசுகையில், “அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். முதல் டோஸின் 28 நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொருவரும் தங்கள் இரண்டாவது டோஸைப் பெற வேண்டும். நீங்கள் சிறிய பக்க விளைவுகளை அனுபவித்தால் கவலைப்பட வேண்டாம், ஆனால் உங்கள் மருத்துவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறினார்.


#MrChe #மிஸ்டர்சே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Facebook Link –https://www.facebook.com/groups/Mr.CheNews/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *