நாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல்: மத்திய அரசு அறிவிப்பு

மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் குறித்த நிகழ்வுகள் இனி ஒரே தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படும். இந்த தொலைக்காட்சி சேனலுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடம் வரை அல்லது அடுத்த உத்தரவு வரை இந்த பதவியில் நீடிப்பார்.
மக்களவை செயல்படும் போது அதன் நேரலையை மக்களவைத் தொலைக்காட்சியிம், மாநிலங்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தொலைக்காட்சியும் வழக்கம் போல ஒளிபரப்பும். அதே வேளையில், இரு அவைகளின்ன் கூட்டு நடவடிக்கை மற்றும் அவை நடவடிக்கைகள் இல்லாத நேரத்தில், இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒரே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். மக்களவையில் ஒரு நிகழ்ச்சி இந்தியிலும், மாநிலங்களவையில் அதே நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கைமாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

https://chat.whatsapp.com/CNEmI480cAS1v2NhRDW0kA

Facebook Link – https://www.facebook.com/groups/PudukaiNews/

Twitter Link – https://twitter.com/PudukaiNews?s=08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *