இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் மும்பை மருத்துவமனையில் 2 பேர் அனுமதி!

Share on

மும்பை: சீனாவில் இருந்து மும்பை வந்த இரண்டு பேர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மும்பை சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வகை வைரஸ் நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 25-ஆக உயா்ந்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 647-ஆக உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்குள் கரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படாத வண்ணம் தடுக்கும் வகையில், மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில், தனியாக ஒரு வார்டு உருவாக்கப்பட்டு, சீனாவில் இருந்து வருவோர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்க ப்ரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவர்களை இங்கு வைத்து பரிசோதனை செய்யவும், வைரஸ் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து வந்த இரண்டு பேருக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால், அவர்கள் இங்கு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களது அடையாளம் வெளியிடப்படவில்லை.

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இந்த வார்டுக்கு அனுப்பி வைக்குமாறு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
•••
சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் கேரளத்தைச் சோ்ந்த செவிலியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று வெளியுறவு இணை அமைச்சா் வி.முரளீதரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் (டுவிட்டா்) அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

சவூதி அரேபியாவில் அல்-ஹயாத் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் இந்தியாவைச் சோ்ந்த செவிலியா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது. அதில் கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் ஒருவருக்கு மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அந்தப் பதிவில் முரளீதரன் குறிப்பிட்டுள்ளாா்.

சீனாவில் பரவி வரும் புதிய கரோனா வகை வைரஸ், பாம்புகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *