கள்ளச் சாராய சாவு 116 ஆனது: சிறப்பு விசாரணை குழு அமைப்பு

உத்தரபிரதேச எல்லையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய அமோகமாக விற்கப்பட்டு வருகிறது. கடந்த 8-ம் தேதி நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை வாங்கிக் குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது பலி எண்ணிக்கை 116-ஐ தாண்டி விட்டது.

 இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது. முன்னதாக இந்த கோர சம்பவத்துக்கு உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கலும், கண்டனமும் தெரிவித்துள்ளார். சுமார் 116 உயிர்களை பறித்த இந்த சம்பவத்துக்கு உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *