10-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓ.பன்னீர்செல்வம் !

Share on

தமிழக துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இதற்கு முன்னதாக, அ.தி.மு.க. ஆட்சியில் 2011, 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் நிதி அமைச்சராக இருந்து பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தார்.

அதன்பிறகு, 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அந்த ஆண்டும் அவரே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு நிலவியதால், ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை. அமைச்சர் டி.ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு, கருத்து வேறுபாடு மறைந்த நிலையில், 2018, 2019-ம் ஆண்டுகளில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வமே பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில், தற்போது ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *