விராட் கோலியின் இணையதளத்தில் வங்கதேச ஹேக்கர் குழு கைவரிசை : ஐசிசி-க்கு எதிராக கருத்துக்கள் பதிவு

Share on

மும்பை: ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நடுவர் வழங்கிய தவறான தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இணையதளத்தை வங்கதேச ஹேக்கர் குழு முடக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலியின் இணையதளத்தில் காலரி என்ற பகுதியில் 3 புகைப்படங்களை சைபர் செக்யூரிட்டி இன்டெலிஜன்ஸ் என்ற வங்கதேச ஹேக்கர் குழு இணைத்துள்ளது. முதல் படத்தில் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச வீரர் லிட்டன் தாசுக்கு மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்த போது அவர் கிரீசில் தொட்டது போன்ற சந்தேக காட்சியும், அடுத்த புகைப்படத்தில் ஹேக்கர் குழுவின் அடையாளங்களும், மூன்றாவது படத்தில் ஐசிசி-க்கு எச்சரிக்கை செய்தியும் உள்ளது.

ஐசிசி-க்கு இணைத்துள்ள புகைப்படத்தில் அன்புள்ள ஐசிசி, கிரிக்கெட் என்பது ஜென்டில் மேன் விளையாட்டு இல்லையா? அனைத்து அணிகளுக்கும் சரி நிகர் உரிமை இல்லையா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. லிட்டன் தாஸ் ஸ்டம்பிங் எப்படி அவுட் ஆகும் என சொல்லுங்கள் என்றும், இதற்கு நீங்கள் உலகத்திடம் மன்னிப்பு கேட்டு அந்த நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *