வட சென்னை படத்தில் கதை என்பதே கிடையாது – வெற்றி மாறன்

வட சென்னை படத்தில் கதை என்பது கிடையாது என படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் ‘வட சென்னை’. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்தத் திரைப்படம் அக்டோபர் 17-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

படம் குறித்து ஊடகங்களுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பேட்டியளித்து வருகிறார். ஒரு பேட்டியில் படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “சிக்கலான மனநிலையில் இருக்கிறேன். படத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம், ஏற்றுக்கொள்ளலாம். எப்படியும் ஆகலாம். இது ஒரு நபரைப் பற்றிய கதை அல்ல. உண்மையில் படத்தில் கதை என்பதே கிடையாது. கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், இன்னும் நிறைய சூழ்நிலைகளைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்” என்று பதிலளித்துள்ளார்.

சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள ‘வட சென்னை’ மூன்று பாகங்களாக தயாராகவுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *