மாநகராட்சி-தோட்டக்கலை உரம் விற்பனை ஒப்பந்தம்

Share on

சென்னை: சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறை சார்பில் தினமும் வீடுவீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அதன்படி, தினமும் 4000 டன் குப்பை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பை அனைத்தும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்குகளுக்கு கொண்டு சொல்லப்படுகின்றன. இவ்வாறு கொண்டு செல்லப்படும் குப்பைகளில் இருந்து மக்கும் குப்பைகளை கொண்டு உரங்களை தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, சமையல் கழிவுகள் மற்றும் இயற்கை கழிவுகளை கொண்டு மாநகராட்சி மயானங்கள், பூங்காக்களில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது. இந்த உரங்கள் பூங்காக்களில் உள்ள செடிகளுக்கும் பயன்படுத்தபட்டன. இதைத் தவிர்த்து பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த உரங்களை தோட்டக் கலை துறைக்கு விற்பனை செய்ய மாநகராட்சி முடிவு செய்தது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கும் ேதாட்டக்கலை துறைக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்படி, உரங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்யலாம் என்றும், இதனால் மாநகராட்சிக்கு குறிப்பிட்ட வருவாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *