புதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் – ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு

புற்று நோய் சிகிச்சைக்கு ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக இரண்டு பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது

அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பானை சேர்ந்த டசூகு ஹோஞ்சோ இந்த நோபல் பரிசை பெறுகிறார்கள்.

இவர்கள் உருவாக்கிய இம்யூன் செக் பாயிண்ட் தெரபி ஒரு புரட்சிகர புற்றுநோய் சிகிச்சை என நோபல் பரிசை வழங்கும் சுவீடிஷ் அகாடெமி கூறி உள்ளது.

வியக்கத்தக்க பலன்களை இந்த சிகிச்சை முறை தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அலிசன் மற்றும் க்யோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டசூகு ஹோஞ்சோ1.01 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த நோபல் பரிசு தொகையை பகிர்ந்து கொள்வார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்த டசூகு ஹோஞ்சோ, “என் ஆய்வை நான் தொடர விரும்புகிறேன். அப்போதுதான் எப்போதும் இல்லாத அளவுக்கு பல புற்றுநோயாளிகளை இந்த இம்யூன் செக் பாயிண்ட் தெரபி காக்கும் என்கிறார்.

“இந்த முறை மூலம் சிகிச்சைப் பெற்ற புற்றுநோய் நோயாளிகளை பார்ப்பது நெகிழ்வான ஒரு கெளரவம். அறிவியலின் சக்திக்கு அவர்கள்தாம் வாழும் உதாரணம்” என்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *