பா.ரஞ்சித் தயாரிப்பில் மரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி , யோகி பாபு நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்

தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் மிகக் குறைவு. அந்த குறையை தீர்க்க வந்த மிகச்சிலரில் கதிரையும் இணைத்துக்கொள்ளலாம். தன் செல்ல நாய்க்கு நடந்த கொடூரத்தை எண்ணி கதறி அழுவது, ஏதும் அறியா மாணவனாக கல்லூரியில் கிண்டலுக்கு ஆளாவது, தோழியின் அக்கா திருமணத்திற்கு வந்து சராமாறியான தாக்குதலுக்கு ஆளாகி , அறைக்குள் துவண்டு தவிப்பது என ஒவ்வொருக் காட்சியிலும் ஆச்சர்யமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

‘அது என்னன்னு தெரியறதுக்குள்ளையேதான் நாயடிக்கிற மாதிரி கிழிச்சு தொங்க விட்டுட்டீங்களே சார்‘,

‘உங்க பொண்ணு குடுத்து வெச்சவ சார், அவ நினைச்சதை நினைச்ச நேரத்துல பேசுற சுதந்திரம் இருக்கு‘,

‘எதுல சார் நாங்க குறைஞ்சி போயிட்டோம்’, ‘எல்லாருமே இங்கே கோழி குஞ்சுகதான் சார்’,

இப்படி ஒவ்வொரு வசனத்தையும் மிக அற்புதமாக , எதார்த்தமாகவும் வெளிப்படுத்தி அப்ளாஷ் அள்ளுகிறார் கதிர்.

‘ஹையோ அப்டிலாம் சொல்லக் கூடாது A For Apple தான் சொல்லணும்’, ‘நான் உன் தேவதையாவேனா‘ எனக் கொஞ்சிப் பேசி உண்மையாகவே தேவதையாகத் தெரிகிறார் ‘கயல்‘ ஆனந்தி. நடக்கும் பிரச்னை ஏதும் அறியாமல் கதிரை சுற்றி வருவதும், ஏங்குவதுமாக இப்படி ஒரு பொண்ணு கிடைக்கணும்பா என இளைஞர்களை நிச்சயம் ஏங்க வைப்பார்.

‘ வா வந்து உக்காரு‘, ‘சின்ன சி‘யா இல்லை பெரிய சி‘யா’ என ஆங்கிலம் தெரியாமல் அலப்பறைக் காட்டும் யோகிபாபுவுக்கு அரங்கமே அப்ளாஷ் கொடுக்கிறது. ஆங்காங்கே சிரிப்பு வெடிகளை சிந்திக்க வைத்து கொடுத்துகிறார்.

படத்தின் அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் ‘கராத்தே‘ வெங்கடேசன். கொலைகார தாத்தாவாக மனிதர் அடி வயிற்றில் சிலிரிட வைக்கிறார். கொஞ்சமும் யோசிக்காமல் கொலை செய்வது, அதே பாணியில் கதிரைக் கொலை செய்ய முயன்று முடியாமல் ரயிலில் சென்று விழுவது என அத்தனை எதார்த்த நடிப்பு. ‘ரூமுக்குள்ள தூக்குப் போட்டுச் சாவறதுக்கு சண்டைப் போட்டுச் சாவட்டும்‘ என்னும் கல்லூரி பிரின்சிபல் ‘பூ‘ ராமு ,‘ஏப்பா நான் எதுக்குப்பா கலேசுக்கெல்லாம்’ என அப்பாவியாக வளம் வந்து நெஞ்சை கனமாக்கும் கதிரின் அப்பா என படத்தில் பல கேரக்டர்கள் மனதில் நிற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *