பரபரப்பு செய்திகளுக்கு இடையில் இந்த 5 இந்திய சாதனையாளர்களை கவனித்தீர்களா?

Share on

கிரிக்கெட் மீது பித்துப்பிடித்து அலையும் தேசம் இந்தியா. மற்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் சாதிப்பது மிக அரிது என்பது பொதுவானதொரு கருத்தாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் மீதும் கவனம் குவிந்திருக்கிறது; இந்தியர்கள் சாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

எங்கே ஆதாரம் என்கிறீர்களா? பொறுமையாக இந்த கட்டுரையை படியுங்கள். ஜகாட்டாவில் நடந்துவரும் 2018 ஆசிய கோப்பை போட்டிகளில் தடகளத்தில் இந்திய வீரர்கள் சாதித்து வருகிறார்கள். விளையாட்டுகளுக்கான எழுத்தாளர் சுப்ரிதா தாஸ் அவர்களில் ஐந்து பேரை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வப்னா பர்மன், ஹெப்டத்லான்

ஸ்வப்னாவுக்கு வயது 21 தான். ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய மங்கை இவர். மிக கடினமான விளையாட்டு பிரிவு இது. ஹெப்டத்லானில் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என ஏழு விதமான சவால்களை முடித்து காட்ட வேண்டும்.

இத்தனை சவால்களோடு கடுமையான பல்வலியோடு சாதித்துக்காட்டிதான் தங்கம் வென்றிருக்கிறார் ஸ்வப்னா. வலியை குறைப்பதற்காக தாடையில் வலுவாக பிளாஸ்திரி பட்டை போடப்பட்ட நிலையில்தான் ஆசிய விளையாட்டுகளுக்கான விளையாட்டரங்கில் இவர் நுழைந்தார்.

இடுக்கண்ணால் கடுமையாக பாதிப்புக்குள்ளானவர் ஸ்வப்னா. இரண்டு பாதங்களிலும் ஆறு விரல்களோடு பிறந்தவர். மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் ரிக்ஷா ஓட்டுநரின் மகளாக பிறந்த ஸ்வப்னாவுக்கு அவரது தாய் தந்தையரால் நாளொன்றுக்கு இரண்டு வேலை உணவளிக்குமளவுக்கு வருவாய் இல்லை. இந்நிலையில், அப்பெண்ணின் தடகள வாழ்க்கைக்கு பெற்றோர்கள் தேவையான நிதி தருவது சாத்தியமே இல்லாதவொன்றாகவே இருந்துவந்தது

ஷூ அணியும்போது மிகவும் சிரமப்படுவார். ஐந்து விரல்களுக்கானதாகத் தான் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். ஹெப்டத்லான் விளையாட்டை பொருத்தவரையில் வீரருக்கு கடுமையான சூழலை தாங்கும் வண்ணம் உடல்உறுதி வேண்டும். வலுவான ஓட்டத்திறன், நன்றாக எறியும் திறன், தாண்டும் திறன்கள் வேண்டும்.

ஸ்வப்னா பர்மனுக்கு ஒவ்வொருமுறை உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதலில் கலந்து கொள்ளும்போதும் பாதத்தில் கடுமையான வலி ஏற்படும். இவை தடகள வீரரின் வேகத்தை பாதிக்கும். ஆனால் ஸ்வப்னா முயற்சியை கைவிடவில்லை. ஆசிய விளையாட்டில் அவர் தங்கம் வென்ற விதம் நாடு முழுவதும் புகழ் சேர்த்துள்ளது. நிறைய பேரிடம் இருந்து இனி நிதி உதவி கிடைக்கும் எனும் நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. குறைந்தபட்சம் இனியாவது அவருக்கான பாதத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படும் ஷூவை அவர் அணியமுடியும்.

நீரஜ் சோப்ரா

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *