படிப்படியாக மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது – அமைச்சர் கே.பி.அன்பழகன்

தருமபுரி: தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை  குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

தருமபுரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் “தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அறிவித்ததின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மதுக் கடைகளை குறைக்க மாநில அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் முடிக்கப்பட்ட திட்டங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் என எதையுமே முழுமையாக தெரிந்து கொள்ளாமல் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அக்கட்சித் தலைவருக்கு தகவல் அளித்துள்ளனர். அதை அடிப்படையாகக் கொண்டு அவரும் பேசிச் சென்றுள்ளார். காரிமங்கலம் பகுதியைச் சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என அவர் பேசியிருப்பது சாத்தியமில்லாத கோரிக்கை.

தருமபுரி மாவட்டத்தில் இருந்து வேலை தேடி மக்கள் வெளியூர் செல்வதை தடுக்க நல்லம்பள்ளி அருகே 1783 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ளது. இதையெல்லாம் அறியாமல் கமல்ஹாசன் பேசிச் சென்றுள்ளார்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *