நெட்டிசன்களிடம் வகையாக மாட்டிக்கொண்டது மோடியின் பிட்னஸ் சேலன்ஜ் வீடியோ!

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீர் என எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது தான் நமது பாரத பிரதமர் மோடியின் பொழுதுபோக்கு. அது மக்களின் தலையில் குண்டைப் போட்டது போலும் இருக்கும். வயிறு குலுங்க சிரிக்க வைப்பது போன்றும் இருக்கும். இப்போது அவர் வெளியிட்டு இருக்கும் பிட்னஸ் சேலன்ஜ் வீடியோ வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையாக மாற்றப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவர் விராட் கோலி, இது போல மோடியால் உடற்பயிற்சி செய்ய முடியுமா என்று தான் உடற்பயிற்சி செய்வதை வெளியிட்டு இருந்தார். அவருடைய சவாலை ஏற்றுக் கொண்டு அதனை நிறைவேறும் பொருட்டு, மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்று வெளியிட்டு உள்ளார். அது வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ சாதாரணமாக வைரல் ஆகவில்லை. சற்றும் எதிர்பார்க்காத பல்வேறு வெர்சன்களில் வைரலாகி வருகிறது.

பார்த்ததும் குபீரென சிரிக்க வைக்கும் வகையில் கலாம் மீம்ஸ்கள் தெரித்துக் கொண்டு இருக்கிறது. அது போல, ” சாமி வருது, சாமி வருது வழிய விடுங்கடா… ” என்ற கலாய் வெர்சனும், ” “பூவரசம் பூ பூத்தாச்சு ” என்ற வெர்சனும், ” கோலவிழியம்மா ராஜகாளியம்மா, பாளையத்தாயம்மா… ” என்ற அம்மன் பாடல் வெர்சனும் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. இப்படி கலாய்கள் ஒருபுறம் இருக்க, “நாட்டுல எவ்வளவு பிரச்சினை நடக்குது, அதை கவனிக்கறது இல்ல… கோலி சொன்னத மட்டும் காதுல வாங்கிட்டு உடனே நிறைவேத்துறாரு… ” என்று சீரியஸான கேள்விகளும் சிலர் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *