தொலைநிலை கல்வி:தனித்துவம் வாய்ந்த அடிலெய்ட் பல்கலைக்கழகம்!

Share on

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்

வெளிநாடுகளில் சென்று உயர்கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி தரம், பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக எட்டாவது இடத்தில் உள்ள University of Adelaide பற்றி இனி பார்ப்போம்.

யுனிவர்சிட்டி ஆஃப் அடிலெய்ட் தென் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் என்ற நகரத்தில் 1874ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1876ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு 100 வருடங்களைக் கடந்து நிற்கிறது. ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பழைமையான பல்கலைக்கழகமான இதில் முதல் அறிவியல் பட்டதாரியாக ஒரு பெண் பட்டம் பெற்றார். மேலும் இப்பல்கலைக்கழகமானது மிகக் குறுகிய காலத்திலே கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கி தனித்துவம் பெற்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

காமன்வெல்த் பல்கலைக்கழகங்களுடன் இணைவுபெற்று செயல்பட்டு வரும் இந்தப் பல்கலைக்கழகம் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்தும் மற்றும் தனிப்பட்ட ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களின் தர வரிசையில்  அடிலெய்டு பலகலைக்கழகத்தை முதல் 150 பல்கலைக்கழகங்களுக்குள் ஒன்றாக வைத்துள்ளது. மேலும் இப்பல்கலைக்கழகத்தின்  சோஷியல் சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ், பிசிக்கல் சயின்ஸ் போன்ற துறைகள் உலக அளவில் முதல் 75ம் இடத்தில் உள்ளது.

இதன் கட்டமைப்பு, கல்வி தரம், ஆராய்ச்சிக்கு முன்னுரிமை தருவது போன்ற காரணங்களால் உலக அளவில் அதிக மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கின்றனர். நானூறுக்கும் மேற்பட்ட இளநிலைப் படிப்புகளையும்  பல்வேறு முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இப்பல்கலைகழகத்தில் இருந்து பெறப்படும்  பட்டமானது  சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் பற்றி பார்ப்போம்.

இளநிலைப் பட்டப்படிப்புகள்

Arts
Arts, Education, Environmental Policy and Management,  Indigenous Programs, International Development, International Studies, Languages, Media, Music, Social Sciences, Engineering, Computer and Mathematical Sciences Computer Science, Engineering, Mathematical Sciences Health and Medical Sciences Dentistry & Oral Health, Health and Medical Sciences, Medicine, Nursing, Psychology Professions Architecture and Built Environment, Business, Economics & Finance, Innovation & Entrepreneurship, Law
Sciences Agriculture, Science


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *