தொலைநிலை கல்வி:ஆஸ்திரேலியாவில் படிக்கணுமா? விசா பெற தயாராகுங்க!ஆஸ்திரேலியாவில் படிக்கணுமா? விசா பெற தயாராகுங்க!

Share on

வெளிநாட்டுக் கல்வி

ஒரு காலத்தில் வெளிநாட்டுக் கல்வி எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் இன்று நடுத்தர வர்க்கத்து மாணவர்களும் வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க செல்வது சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியைப் படித்து சர்வதேச தரத்தில் பட்டம் பெறுவது என்பது பல மாணவர்களின் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் சிறப்பானவற்றைப் பட்டியலிட்டு பல அவசியமான தகவல்களை இதுவரை நாம் பார்த்தோம்.

பட்டப்படிப்பைத் தருவது மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாணவனுக்கும் அவனுக்குள்ளிருக்கும் சுய திறமைகளை அடையாளம் காண்பித்து, ஆராய்ச்சி மற்றும் செயல்முறை விளக்கங்கள் மூலம் அவனை மெருகேற்றி  சுய சிந்தனையின்  அடிப்படையில் மாணவனின் தகுதிக்குத் தகுந்தாற்போல் வேலைவாய்ப்பை பெறச் செய்கிறது. மேலும் அதன் மூலம் தனது பட்டப்படிப்பின் தரத்தை அளவிடுகிறது உலக அளவில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இருக்கும் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள்.

ஆஸ்திரேலியாவின் சூழல், மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றினூடாக தரமான கல்வியையும் சேர்த்து வழங்குகிறது அங்கு உள்ள பல்கலைக்கழகங்கள். இப்படித் தரமான உயர்கல்வி பெற்று தன்னையும் உயர்த்திக்கொண்டு, உலக வளர்ச்சிக்கும் தன்னால் இயன்ற சேவையைச் செய்யப்போகும் மாணவர்கள், முதலில் ஆஸ்திரேலியன் எம்பஸி நடத்தும் விசா தேர்வில் தேர்வாகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசா தேர்வில் பங்குபெறச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்துச் சான்றிதழ்களையும் சரிபார்த்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. Schooling Mark sheets
2. UG Individual Mark sheets
3. Degree certificate
4. Passport
5. Passport size photographs
6. English Language Proficiency Certificate or Medium of Instruction letter in English
7. Motivation Letter / Statement of Purpose
8. Financial Statements
9. Admission Letter from University
10. Accommodation Letter
11. Updated Resume
12. Covering letter
13. Parents Affidavit Letter
14. Visa application form  Depends on the country

விசா பெறுவதற்கு முன்பும் பின்பும் என்னென்ன ஏற்பாடுகளை மாணவர்கள் செய்ய வேண்டும் என்பதையும், விசா இன்டர்வியூவிற்கு மாணவர்கள் தங்களைத் தயார் செய்வது எப்படி? என்பதையும் அடுத்த இதழில் பார்ப்போம்.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *