திருமணமான 8 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை

Share on

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர், 5வது  தெருவை சேர்ந்தவர் கண்ணபிரான் (28). இவர், அதே பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர், செங்கல்பட்டில் ஒரு கல்லூரியில் படித்தபோது பவித்ரா என்ற பெண்ணை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். பவித்ரா தனியார் கம்பெனியில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். ஆரம்பத்தில் நன்றாக சென்ற இவர்களது இல்லறவாழ்வில், மனைவி மீது கண்ணபிரான் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.  நேற்று முன்தினம் இரவும் இதேபோன்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த பவித்ரா, வீட்டின் உள்ளே அறையில் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே காஞ்சிபுரத்தை சேர்ந்த பவித்ராவின் தந்தையான டில்லிபாபு, தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மகளின் மரணத்திற்கு அவளது கணவன் கண்ணபிரான் தான் காரணம் என்றும், எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சங்கர் நகர் காவல் நிலையத்தில்  புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் கண்ணபிரானை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி எட்டு மாதங்களே ஆவதால், தாம்பரம் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *