தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் படிக்கலாம்!

Share on

நாகப்பட்டினத்திலிருக்கும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Fisheries University (தற்போது Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழங்கும் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc. – Master of Fisheries Science), மற்றும் மீன்வள அறிவியல் முனைவர் (Ph.D), பருவநிலை மாற்றம் மற்றும் மீன்வள ஆய்வு (M.Phil) படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc)தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின்கீழ் தூத்துக்குடி மற்றும் பொன்னேரி ஆகிய இரு இடங்களில் செயல்பட்டுவரும் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் (Fisheries College and Research Institute) தூத்துக்குடியிலுள்ள கல்லூரியில் 1. Aquaculture – 4, 2. Aquatic Animal Health – 3, 3. Aquatic Environment Management – 2, 4. Fisheries Economics – 2, 5. Fisheries Engineering and Technology – 2, 6. Fisheries Extension – 2, 7. Fish Processing Technology – 3, 8. Fisheries Resource Management – 2, 9. Fish Quality Assurance and Management – 3, 10. Fish Biotechnology – 1 என்று மொத்தம் 10 பிரிவுகளில் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பிற்கு 24 இடங்கள் இருக்கின்றன. பொன்னேரியிலுள்ள கல்லூரியில் Aquaculture எனும் பிரிவில் மட்டும் 4 இடங்கள் இருக்கின்றன.

கல்வித் தகுதி் : முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் வழங்கிய நான்காண்டு கால அளவிலான இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc) பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பட்டப் படிப்பில் 65% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். தரக்குறியீடு (Grade) எனில் மேற்காணும் மதிப்பெண்ணுக்கு இணையான 6.5 குறியீட்டைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

மொத்தமுள்ள இடங்களில் 75% இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவும், 25% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்கள், பின்னர் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்படும். இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பை வேறு மாநிலங்களில் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு இருப்பிடச் சான்றிதழைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். முந்தைய ஆண்டுகளில் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc) படிப்பில் சேர்ந்து, படிப்பைத் தொடர முடியாமல் இடையில் விட்டுவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *