தமிழகத்தில் நள்ளிரவு கொட்டித்தீர்த்த கனமழை….. 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

Share on

சென்னை: ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த பெய்தது. சென்னை தி.நகர், ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட நகரின் மைய பகுதிகளிலும், வண்டலூர், தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழையால் குளிர்ச்சியான நிலை காணப்பட்டது.

இதேபோல் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சிவகங்கை, காரைக்குடி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, மணவூர், சேலம், ஏற்காடு மலை அடிவாரம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, கரூர், மாயனூர், வெள்ளியணை, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, மாத்தூர், கல்லாவி, பெரம்பலூர், குன்னம், வேப்பூர், செட்டிகுளம், பாடாலூர், அஸ்தனம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல் கேரளாவின் இடுக்கி, பாலக்காடு, திரிச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7-ம் தேதி வரை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6ம் தேதி வரை கேரளத்தின் பல்வேறு மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *