தமிழகத்திலேயே முதன் முறையாக மருத்துவ கல்லூரிகளில் சட்டம் சார்ந்த மருத்துவ துறை: ஸ்டான்லியில் அடிக்கல் நாட்டப்பட்டது

Share on

வண்ணாரப்பேட்டை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டம் சார்ந்த மருத்துவ துறைக்காக ₹6 கோடி மதிப்பீட்டில் தரைதளத்துடன் 2 மாடிகள் கொண்ட புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம் தலைமை தாங்கினார். பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஆர்எம்ஓ ரமேஷ் வரவேற்றார். தமிழகத்திலேயே முதன் முறையாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சட்டம் சார்ந்த மருத்துவ துறைக்கு தனி கட்டிடம் ஸ்டான்லி மருத்துவமனையில் அமைய உள்ளது. இந்த கட்டிடத்தில் வரவேற்பு அறை, டெக்னீசியன் அறை, ஆவணங்கள் பாதுகாப்பு அறை, பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அறை, 1,250 உயர்க்கல்வி மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறை, 200க்கும் மேற்பட்ட அரிய வகை பொருட்களுடன் மியூசியம் மற்றும் பாதுகாப்பு டெமோ அறை என பல்வேறு பிரிவுகள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *