சிசிடிவி பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்பட விநியோகம் நிறுத்தம்

சென்னை : சிசிடிவி பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்பட விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நவ.15க்குள் சிசிடிவி பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்பட மாட்டாது  என்று  தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் திருட்டு வீடியோவை ஒழிக்க தயாரிப்பாளர்கள் சங்கம்  மற்றும்  திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இணைந்து குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும்  திரைப்படத்தை காண வரும் பொதுமக்களிடம் கேமரா உள்ளதா என கட்டாயமாக பரிசோதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *