கோமளவல்லி என்பது அம்மாவின் பெயரே கிடையாது – டி டி வி தினகரன்

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது.

ஆனால், இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதற்கு விளக்கமளித்துள்ளார்.  அப்போது பேசிய அவர் சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தியுள்ளார்கள் என்று எனக்கு பலரும் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தனர்.

ஆனால், ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்பது எனக்கே தெரியும். 2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர், ஜெயலலிதாவை கோமளவள்ளி என கூறி விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவே என்னிடம், “ஏன் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள் என்று கேட்டார்.

நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே, ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று என்னிடம் கேட்டார்.

அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை. நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *