பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டியில் 45 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் உயிர் வாழும் வினோத மனிதன்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பி.உசிலம்பட்டி ஊராட்சி கட்டையாண்டிபட்டியில் 45 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் உயிர் வாழ்ந்து வரும் வினோத மனிதனைப் பற்றி இந்த செய்தி தொகுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சி கட்டையாண்டிபட்டியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட விவசாயம், கூலி வேலை உள்ளிட்டவை செய்துவரும் குடும்பங்கள் வசித்து வருகின்றது. அதில் ஊரின் நடுப்பகுதியில் கோவில் வீடு அருகே வசித்து வரும் தவுடன் மகன் நல்லு வயது (80) இவருக்கு தான் 19 வயதில் அழகி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவருக்கு 3 மகன்களும் 4 மகள்களும் பிறந்தனர். இதில் முதல் மகன் நல்லான் வயது (50) இரண்டாவது மகன் முருகன் வயது (35) மூன்றாவது மகன் அடைக்கன் வயது (30) இவர்கள் மூவரும் பொன்னமராவதி பகுதிகளில் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். மகள்கள் பெரியநாச்சி வயது 48, மீனாட்சி வயது 41, அடக்கி வயது 31 என்ற மூன்று மகள்களும் உள்ளனர். இதில் சின்னகருப்பி என்பவர் சிறுவயதிலேயே இறந்து விட்டார். நல்லு சுமார் 50 ஆண்டு காலமாக வேகுப்பட்டியில் உள்ள ஒரு நகரத்தாரின் இல்லத்தில் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார்.

உணவின்றி வாழ்க்கை

நல்லு கடவுள் மீது அதீத பக்தி கொண்டதனால் சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளாக உணவே உட்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியில் எங்கு சென்றாலும் சாப்பிடாமல் பால், டீ, குளுக்கோஸ், சத்துமாத்திரைகள் உள்ளிட்டவைகளை மட்டுமே உணவு ஆதாரமாக பயன்படுத்தி நாற்பத்தி ஐந்து ஆண்டு காலமாக உணவின்றி வாழ்ந்து வருகிறார். குடும்பத்தார்கள் உறவினர்கள் பலமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து பார்த்தனர். இவருக்கு உடம்பில் எந்த கோளாறும் இல்லை இவர் உணவு உட்கொள்ளலாம் எனவும் மருத்துவர் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் உணவே உட்கொள்ள வேண்டாம் என்ற கோட்பாட்டுடன் கடவுள் மீதும் அதீத பக்தி கொண்ட இவர் 45 ஆண்டு காலமாக உணவின்றி வாழ்ந்து வருகின்றார். வீட்டை விட்டு எங்கும் குடிநீர், உணவு எதுவும் உட்கொள்ளாமல் வீட்டில் மகன் மகள்கள் வாங்கிவரும் சத்து மாத்திரைகள், குளுக்கோஸ் மட்டுமே பயன்படுத்தி காலம் தள்ளி வருகிறார். கிராம மக்கள் பலமுறை அவரிடம் உணவு உட்கொள்ள வலியுறுத்தியும் வந்தனர். எதற்கும் தலை சாய்க்காமல் தற்பொழுது கட்டையாண்டிபட்டியில் உள்ள தனது வீட்டின் புளியமரத்தடியில் வசித்து வருகிறார்.

தந்தையின் நிலை அறிந்து திருமணம் செய்யாமல் இருக்கும் மகள்

தந்தையின் இந்த நிலையை அறிந்த நல்லுவின் மகள் மீனாட்சி என்பவர் தந்தையை கவனித்துக் கொள்வதற்காகவும் தனது அண்ணன் தம்பிகளின் மகன், மகள் உள்ளிட்ட 8 குழந்தைகளையும் பராமரித்து கொள்வதற்காகவும் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

மிஸ்டர் சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *