சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரிய கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் லெணா விலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கான செயலியின் மூலம்  ‌கல்லூரி வளாகத்தில் +12 மாணவர்களுக்காக விழிப்புணர்வு  நடைபெற்றது .நான்காம் ஆண்டு மாணவர்கள் உருவாக்கிய செயலியின்

முக்கியத்துவத்தையும் அதன் பயன்பாட்டையும் அத்துடன் இன்றைய நடைமுறையில் வாகன ஓட்டிகளின் பாதுக்காப்பிற்கான உபயோகிக்கும் முறையையும் தகுந்த உதாரணத்துடன் +12 மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

சாலை வழிகளில் ஏற்படும் வாகன விபத்துகளை கண்டறிந்து செய்தியிடல் சேவையுடன் இருப்பிட ஒருங்கிணைப்புகளைப் பற்றி அவசரச் சேவை அல்லது சுகாதார மையத்திற்கு தெரிவிக்கும்  செயலியானது இரண்டு முறையில் விபத்தினை கண்டறியும். வேகம் மற்றும் ஒலி இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால் அங்கு விபத்து நடந்தது கண்டறியப்படும். அதன் பிறகு எச்சரிக்கை ஒலி அமைப்பானது 30 விநாடிகள் ஒலிக்கும் அந்த நபர் பாதிக்க பட வில்லை என்றால் அலாரம் சேவையை நிறுத்தி விடலாம் அல்லது பயணாளர் பாதிக்கப்பட்டிருந்தால் விபத்து நடந்த செய்தியானது சுகாதார மையம் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

மேலும் இதன் செயலியை பயன்படுத்துவதன் மூலமாக குமரி முதல் சென்னை வரையில் உள்ள அனைத்து நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களை உடன் அறிந்து கொண்டு தடுக்க முடியும் மேலும் காப்புரிமை பெறுவதற்கு கல்லூரியின் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளனர்.

மிஸ்டர் சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *