புதுக்கோட்டை மாவட்டம் 08.06.2022 அன்று வருகையினையொட்டி அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம்
வருகையினையொட்டி, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.06.2022) நடைபெற்றது.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 08.06.2022 அன்று
புதுக்கோட்டை மாவட்டத்தில், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகைதர உள்ளார்கள். இந்நிகழ்வினை முன்னிட்டு கண்காட்சி
அரங்குகள் மற்றும் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும். மேலும் அதிகளவிலான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்கும் வகையில் அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், விழா நாளன்று பயனாளிகளை பாதுகாப்பான முறையில் அழைத்து வருவது குறித்தும், விழா
நடைபெறும் இடத்திற்கு தடையற்ற மின்சார வசதி ஏற்படுத்துதல், குடிநீர் வசதி மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அனைத்துத் துறை அலுவலர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும் விழாவினை சிறப்பாக நடத்திட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக
வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆர்.ரம்யாதேவி (காவேரி-வைகை-குண்டாறு), பெ.வே.சரவணன் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மிஸ்டர் சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *