தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 3 அரசுப் பண்ணைகளில் வேலை செய்யும் தினக் கூலி தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டமானது புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்ணைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அரசப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 3 அரசுப் பண்ணைகளில் வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், வெள்ளாளவிடுதி மாநில எண்ணெய் வித்து பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் காவலர்களால் தாக்கப்படுவதை தடுத்து, தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு பண்ணைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தரிசு போடாமல் சாகுபடி செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மிஸ்டர் சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *