தமிழக முதல்வர் வருகையினையொட்டி புதுக்கோட்டை விளையாட்டரங்கில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு மேடை பந்தல் அமைக்கும் பணி முகூர்த்த கால் ஊன்றும் விழா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புதுக்கோட்டை மாவட்டம் 08.06.2022 அன்று வருகையினையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, மேடை, பந்தல் அமைக்கும் பணிகளுக்கான, கால்கோள் நடும் நிகழ்வினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி
அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் இன்று (01.06.2022) தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப.,
அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கவிதைப்பித்தன், திரு.உதயம் சண்முகம், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் த.சந்திரசேகரன், க.நைனாமுகமது, அரு.வீரமணி, பி.டி.குமார், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பாஸ்கர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மிஸ்டர் சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *