கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கல்

தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத்துறை – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கான பிரதம மந்திரி
குழந்தைகள் பாதுகாப்பு திட்டமானது (PM Cares For Children) மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் 29.05.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டு செயல்பாட்டிற்குகொண்டு வரப்பெற்றது.
இத்திட்டத்தின் மூலம் ரூ. 5,00,000/த்திற்கு குழந்தைகளுக்கான சுகாதார காப்பீடு திட்டமானது ((Ayushman Bharat Scheme (PM-JAY)) செயல்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த 2 குழந்தைகளுக்கு சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது (Health Insurance Card Through Post
Office). மேலும் 2 குழந்தைகளுக்கும் பிரதமந்திரி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.7,46,030/-ம் மற்றும் ரூ.5,56,550/- குழந்தைகளின் அஞ்சலக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இத்தொகையானது குழந்தைகள் இருவருக்கும் 18-வயது அடையும் பொழுது தலா ரூ.10,00,000/-மாக முதிர்வு பெறும். 18-வயதிலிருந்து 23-வயதை அடையும் வரை ரூ.10,00,000/-த்திற்கான வட்டியினை எடுத்து 2 குழந்தைகளின் மாதாந்திர பராமரிப்பு செலவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் 23-வயதை அடைந்தபிறகு 2
குழந்தைகளுக்கும் தலா ரூ.10,00,000/-ம் அவர்களது அஞ்சலக வங்கி கணக்கிலிருந்து எடுத்துகொள்ளலாம் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30.05.2022 அன்று காணொலிக்காட்சி வாயிலாக மாண்புமிகு பிரதம மந்திரி அவர்கள் குழந்தைகளிடம் உரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த 2 குழந்தைகளுக்கான அஞ்சலக கணக்குபுத்தகம், சுகாதார காப்பீட்டு அட்டை, பிரதமரின் கடிதம் மற்றும் பிரதம மந்திரியின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்.

மிஸ்டர் சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *