திருமயத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா

திருமயம் சந்தப்பேட்டையில் உள்ள வெட்டி கண்மாய் கரையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக 30-ஆம் தேதி கிராம தேவதைகள் வழிபாடு நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து 31 ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை செய்யப்பட்டது . மாலை 5 மணி அளவில் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இரவு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. பின் சிவாச்சாரியார்கள் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து கோபுரத்தின் மேலுள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

பின்னர் மலர் தூவி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. இதில் திருமயம் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . விழா ஏற்பாடுகளை வெட்டிவயல் ஆயக்கட்டுதாரர்கள், சந்தைப்பேட்டை ஊரார்கள், கிராமத்தார்கள், பாதயாத்திரை குழுவினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

மிஸ்டர் சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *