ஆலங்குடி பேரூராட்சியில் குடிநீரை உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள்

ஆலங்குடி பேரூராட்சியில் 15-வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் சில பகுதியில் உள்ள வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் இணைப்புகள் மூலம் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என கண்டறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 10க்கும் அதிகமான இடங்களில் மின் மோட்டார் வைத்து குடிநீர் திருட்டுத்தனமாக எடுத்தது தெரியவந்தது. இதில் ஆலங்குடி செயல் அலுவலர் பூவேந்திரன் அவர்களின் கண்காணிப்பில் 15 வார்டுகளில் 5 வார்டுகல் தவிர மற்ற அனைத்து வார்டுகளிலும் மின் மோட்டார்கள் திருட்டுத்தனமாக பயன்படுத்தி குடிநீர் எடுத்தது தெரியவந்தது.

இந்நிலையில் உடனடியாக பேரூராட்சி நீர் உபயோகிப்பாளர் மற்றும் பணியாளர்கள் மின் மோட்டாரை பறிமுதல் செய்தனர்.மேலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. குடிநீர் தொடர்பான குறைகளை பொது மக்களிடம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் ஆலங்குடி பகுதி முழுவதும் அதிரடி ஆய்வு நடவடிக்கை தொடரும் என்றனர் . கண்காணிப்பு பணியில் குமார், மேற்பார்வையாளர், உதவி செயல் அலுவலர் ரேவதி, பூவேந்திரன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அனுமதியின்றி குடிநீர் திருடினால் இனிவரும் காலங்களில் மின் மோட்டார் பறிமுதல் செய்து அதை வழங்கப்படமாட்டாது என்றும், அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் ஆலங்குடி பேரூராட்சிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கண்காணிப்பில் இளநிலை உதவியாளர் ரேவதி துப்புரவு மேற்பார்வை யாளர் ராஜேந்திரன் குமார் தவேந்திரன் மற்றும் அனைத்து பணியாளர் களும் ஈடுபட்டனர். மேலும் அனுமதியின்றி குடிநீர் திருடினால் பறிமுதல் மற்றும் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

மிஸ்டர் சே புதுக்கோட்டை மாவட்ட செய்திகளை தெரிந்து கொள்ள WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *