மதுபான கடையை அகற்றக்கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் நாயக்கன்பட்டியில் கடந்த 15 ஆண்டுகளாக அரசு மதுபான கடை ஒன்று பொது மக்கள் குடியிருப்புக்கு அருகிலேயே இயங்கி வந்தது. இந்த மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும் ,பலமுறை கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து இன்று ஊர் பொதுமக்கள், பெண்கள் ,கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகள் ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள் .இதில் அவர்கள் பல குடும்பங்களுக்கு கேடு செய்யும், இளைஞர்களை நாசம் செய்யும் இந்த மதுபான கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என போராட்டம் செய்தனர். இந்த தகவல் அறிந்தது வட்டாட்சியர் புவியரசன் மற்றும் கந்தர்வக்கோட்டை காவல் துறை சம்பந்தபட்ட இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து பேசினர் இதனால் போராட்டக்காரர்கள் 300க்கு மேற்பட்டோர்கள் கலைந்து சென்றார்கள்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *