பொன்னமராவதி அருகே சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் மாத அமாவாசையை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை யாக பூஜை

பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிப்பட்டி சிவபுரம் ஸ்ரீம் அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கோவில் அறங்காவலர் ராமன்ஜி தலைமையில் கோவிலை சுற்றி வலம் வந்து அபிஷேக புனிதநீர் குடத்தை யாகசாலையில் வைத்து சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் யாகத்தில் வளர்க்கப்பட்ட புனிதநீர் குடத்தை மீண்டும் கோவிலை சுற்றி வலம் வந்து பகவதி அம்மனுக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்மாலை அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு பகவதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை, கோவை, தஞ்சாவூர், வேலூர், ராமநாதபுரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீம் சிவசித்தர் ஐயா அவர்கள் ஐந்து வகை பழங்கள் பிரசாதமாக வழங்கினார். பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *