இலுப்பூரில் கிரிக்கெட் போட்டி 

இலுப்பூரில் ஆண்டு தோறும் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது வழக்கம்.அதே போல இந்த ஆண்டும்   கிரிக்கெட் கடந்த இரண்டு நாட்ளாக நடைபெற்றது. இந்த போட்டி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் டெவில்ஸ் அணியினரால் நடத்தப்பட்ட மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி ஆகும்.
இதில் அன்னவாசல், இலுப்பூர், கீரனூர், உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில் இருந்து 24-அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது.

இதில் முதல் பரிசினை வடமலப்பூர் அணியினரும், இரண்டாம் பரிசினை இலுப்பூர் டெவில்ஸ் அணியினரும், மூன்றாம் பரிசினை இலுப்பூர் முத்தூட் அணியினரும், நான்காம் பரிசினை உடையாண்டிபட்டி அணியினரும் தட்டி சென்றனர், பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் பரிசுகள், ரொக்க பணம் ஆகியவை வழங்கப்பட்டன. 
இதில் இலுப்பூர் வணிகர் சங்க தலைவர் லெட்சுமணன், நகர செயலாளர் சத்யா மணிகண்டன், பேரூர் மன்ற உறுப்பினர் சரவணன், வார்டு செயலாளர் ராமூலு, மீனாட்சி, ரஞ்சித் உள்ளிட்ட இலுப்பூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *