அரிமளம் அருகே அய்யனார் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைத்த பானைகள் மீது நடந்து சென்று ஆசி வழங்கிய பூசாரி

அரிமளம் அருகே உள்ள உப்புபட்டியில் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவை வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடி வந்தனர். இந்த திருவிழாவில் கடியாபட்டி, குளத்துப்பட்டி, கொட்டியகாரன்பட்டி, தச்சன் வயல், சூலபட்டி, கைக்குறிச்சி உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி வருவது வழக்கம்.

இந்த நிலையில், உள்ளூர் பிரச்சனை மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அய்யனார் கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில். இந்த ஆண்டிற்கான வைகாசி கோவில் திருவிழா இன்று விமர்சையாக தொடங்கியது. 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் முதல் நாளான இன்று பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் ஒரு கிராமத்திற்கு இரண்டு பானைகள் என 7 கிராமத்தின் சார்பாக 14 பானைகள் அய்யனார் கோயில் முன்பு வரிசையாக வைத்து பொங்கல் வைக்கப்பட்டது. முதலில் பொங்கல் பானையில் அரிசியின் கழனி தண்ணீர் ஊற்றி பூஜையுடன் தீ மூட்டப்பட்டது.

ஒவ்வொரு பொங்கல் பானையும் பொங்கி வழியும்போது பெண்கள் குலவையிட்டு தொட்டு வணங்கினர். இவ்வாறு 14 பொங்கல் பானைகளும் பொங்கியது. இதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி தகதகவென ஆவி பறந்து கொண்டிருக்கும் பொங்கல் பானைகளின் மீது 3 முறை நடந்து சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். இதில் பொங்கல் பானைகளுக்கு எந்த சேதமும் இல்லாமல் பூசாரி நடந்து சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வை காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டு கண்டுகளித்து, அருள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து பொங்கலை அய்யனார் சுவாமிக்கு படைத்து வழிபட்டு சென்றனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *