பொன்னமராவதி பகுதிகளில் இரண்டு கண்மாய்களில் மீன் பிடித்திருவிழா

பொன்னமராவதி ஒன்றியத்தில் இரண்டு கண்மாய்களில் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.
நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாயம் செழிக்கவும் மழை பெய்ய வேண்டியும் பாசனக் கண்மாய்களில் மீன்பிடி திருவிழாக்கள் நடைபெறும்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பெறுந்தொற்று ஊரடங்கு காரணமாக மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ஏனக்கண்மாய் மற்றும் மணப்பட்டி கிராமத்தில் உள்ள கிளரங்கண்மாய் என இருவேறு கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மீன்பிடி திருவிழா வெகு விமர்சையாக  நடைபெற்றது. இதில் ஜாதி, மதம் பாராமல்   சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த  100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலையிலேயே கண்மாயில் குவிந்து பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி மீன்களோடு மீன்களாக துள்ளிக் குதித்து போட்டி போட்டுக்கொண்டு  ஊத்தா, தூரி, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன் பிடிக்கத் தொடங்கினர். அதில் ஒவ்வொருவர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கண்மாயில் பிடித்த மீன்களை அவரவர் வீடுகளுக்கு கொண்டு சென்று சாமி தரிசனம் செய்து சமைத்து உண்பதை ஐதீகமாக கொண்டுள்ளனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *