பொன்னமராவதி பேரூராட்சியின் சார்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் மஞ்சள் துணிப்பை விநியோகம்

பொன்னமராவதி பேரூராட்சியில் நகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமையில் நடைபெற்றது. நகரின் தூய்மைப்பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் விளக்கிப்பேசினார். தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழித்து, துணிப்பையை பயன்படுத்துவேன். பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சியாக பொன்னமராவதி பேரூராட்சியை உருவாக்குவேன் என பேரூராட்சியின் துப்புறவு பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பை பயன்பாட்டினை முற்றிலும் களையும் வகையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மஞ்சள் துணிப்பைகள் வழங்கப்பட்டது. பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேஷ், உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *