ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தெப்ப உத்ஸவம் நேற்றிரவு நடைபெற்றது.

ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான கொத்தமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா மே. 15-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அம்மன் வீதியுலாவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 23 ஆம் தேதியும், தீர்த்த உத்ஸவம் 24 ஆம் தேதி நடைபெற்றன. தொடர்ந்து, தெப்ப உத்ஸவம் நேற்றிரவு நடைபெற்றது. இதையொட்டி, கோயில் குளத்தில் மின்விளக்குகளால் அலங்கிரக்கப்பட்ட தெப்பத்தில், அம்மனை எழுந்தருளச் செய்து தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீரமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *