வாராப்பூரில் பாலையடி கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு

வாராப்பூரில் பாலையடி கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது .இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 900 காளைகள் மற்றும் 300 காளையர்கள் பங்கேற்று வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை விரத்துடன் தழுவி வருகின்றனர்.

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 13-ஆம் தேதி தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியது முதல் தினசரி ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு போட்டிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று வாராப்பூரில் பாலையடி கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு அங்கு உள்ள ஜல்லிக்கட்டு திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா அவர்கள் மற்றும் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப் பாண்டியன் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா அவர்கள் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 900 காளைகளும் 300 காளையர்கள் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிகட்டு 3 சுற்றுகலாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லுக்கட்டி தழுவினர். இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை தழுவிய காளையர்களுக்கும் காளைகளின் பிடியில் சிக்காமல் செல்லும் காளைகளுக்கும் சைக்கிள், கட்டில், பிரோல், நாற்காலி, சில்வர் பாத்திரங்கள், பேன், மிக்ஸி, குக்கர், கிரைண்டர், வெள்ளி காசு, ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டது. அதேபோல் காளையர்களும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே காளைகளை தழுவ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சுகாதாரத்துறை கால்நடைத்துறை வருவாய்த்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மேலும் இந்த ஜல்லிக்கட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *