அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயம்

அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது-31) இவரது சகோதரி குளத்தூரை சேர்ந்த கலைச்செல்வி (வயது-25) அவரது மகன் ரோகித் நாதன் (வயது-2 ) ஆகிய 3 பேரும் அன்னவாசலில் இருந்து குளத்தூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை பாண்டி ஒட்டியுள்ளார் இவரது மோட்டார் சைக்கிள் அன்னவாசல் அடுத்து கீழக்குறிச்சி மலம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பாண்டி, கலைச்செல்வி, ரோகித் நாதன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து அன்னவாசல் போலீசார் கூத்தினிப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சுவாமிநாதன் (வயது-45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *