புதுக்கோட்டையில் 5-ஆவது புத்தகத் திருவிழா. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடக்கிறது

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை வருகின்ற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக்கோட்டையில் நடத்துகிறது.

5-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கான வரவேற்புக்குழு கூட்டம் புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். புத்தகத் திருவிழாவிற்கான பதாகையை வெளியிட்டு அவர் பேசும்போது, மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ள 5-வது புத்தகத் திருவிழா மிகவும் எழுச்சியோடு நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு பள்ளிக் கல்வித்துறையும் மாவட்ட நிர்வாகமும் முழு அளவில் ஒத்துழைப்புத் தரும் என்றார்.

புத்தகத்தின் அவசியம் குறித்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் (பொ) எஸ்.கருணாகரன் பேசினார். புத்தகத் திருவிழா குறித்து கவிஞர் நா.முத்துநிலவன் அறிமுக உரையாற்றினார். விழாவிற்கான குழுக்களை அறிமுகப்படுத்தி அறிவியல் இயக்க பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், பங்கேற்க உள்ள பதிப்பகங்கள் குறித்து மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ் ணன், விழாவின் பங்கேற்பாளர்கள் குறித்து முனைவர் ஆர்.ராஜ்குமார், பள்ளி மாணவர்களின் கலை, அறிவியல் நிகழ்வுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் பேசினர்.

நிகழச்சிகள் விபரம்:

புத்தகத் திருவிழா ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் புத்தக விற்பனை அரங்குகளை பார்வையிடல், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், நடமாடும் கோளரங்கம் நிகழ்வு, மந்திரமா? தந்திரமா?, காகித மடிப்புக்கலை, கணித புதிர்கள், கணித விளையாட்டுகள், நாணய கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.

மாலை 6 முதல் இரவு 7 மணி வரை பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு பிறகு நடைபெறும் பொதுநிகழ்வில் அரசுத்துறை உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிறப்பு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் உரையாற்றுவார்கள்.

மாவட்டம் முழுக்க உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஒரே நாளில் “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்வின் வாயிலாக 1.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்று வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. புத்தகத்திருவிழாவை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் வகையில் சைக்கிள் பேரணி, இருசக்கர வாகனப் பேரணி, கல்லூரிகளில் கருத்தரங்குகள், பத்திரிக்கையாளர் சந்திப்பு, போஸ்டர் வெளியீடு, ஆட்டோ பிரச்சாரம், மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள், மற்றும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்துவது.

ஆட்சியர் தலைமையில்

புத்தகத் திருவிழாவின் தலைவராக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பணியாற்றுவார். ஒருங்கிணைப்பாளர்களாக கவிஞர்.தங்கம்மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன், அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார், அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ம.வீரமுத்து, மாவட்டச் செயலாளர் மு.முத்துகுமார், மாவட்ட பொருளாளர் விமலா வள்ளல் ஆகியோரும் பல்வேறு குழுக்களும் தேர்வுசெய்யப்பட்டனர்.முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து வரவேற்க, இணைச் செயலாளர் ரெ.பிச்சைமுத்து நன்றி கூறினார்.

WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *